
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல நடிகை பூர்ணா பேயாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில்,மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். அருள் முருகன் இசையமைத்திருந்தார். திகில் கலந்த பேய் படமான பிசாசு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிஸ்கின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. அதனை தொடர்ந்து பிசாசு 2 படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பெரும் செட் போட்டு நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். முதல் பாகத்தை விட பிசாசு 2 திரைப்படத்தில் அதிக திகில் காட்சிகள் இடம்பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் பூர்ணா உள்ளிட்டோர் பேயாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Advertisement
Advertisement