பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை! திருமணமான 2 வாரங்களிலேயே கணவன் மீது புகாரளித்த சர்ச்சை நடிகை!actress-poonam-pandey-complaint-against-husband

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். சர்ச்சைகளுக்கு பெயர்போன அவர் 2011ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை கிளப்பியவர். 

இவ்வாறு சுயவிளம்பரத்திற்காக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் பூனம் பாண்டே கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விளம்பரப் படங்களை இயக்கி,  தயாரிக்கும் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர் ஏழு ஜென்மங்கள் அவருடன்  சேர்ந்து வாழ வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

marriage

பின்னர் திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தனது கணவருடன் கோவாவுக்கு புறப்பட்டுள்ளார். அங்கு சென்ற இடத்தில் அவர் தனது கணவர் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்து, தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கோவா போலீசார்கள் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.