44 வயது ஆகுது... இப்ப போய் எப்படி... ரசிகரின் கேள்விக்கு நடிகை பூஜா என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

44 வயது ஆகுது... இப்ப போய் எப்படி... ரசிகரின் கேள்விக்கு நடிகை பூஜா என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!!


Actress Pooja Twitter post viral

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா. அதனை தொடர்ந்து அஜித், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான நான் கடவுள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நான் கடவுள் படத்திற்காக பூஜா 5 விருதுகளைப் பெற்றார். இவர் இலங்கையிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பெரிதாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத நடிகை பூஜா, தற்போது ட்விட்டரில் அவருடைய ரசிகர்களிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், பூஜாவிடம், நீங்கள் கம்பேக் கொடுக்கலாம்ல? என்று கேட்கிறார். அதற்கு பூஜா எனக்கு 44 வயது ஆகிவிட்டது  இனியும் கம்பேக் கொடுப்பது என்றால் சித்தி கதாபாத்திரம் தான் பண்ணனும் என ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார்.