நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
தங்க நிற உடையில் தக தகவென மின்னும் பூஜா ஹெக்டே.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்.!?

தமிழ் திரை துறையில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி'திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் நடிகர் விஜயுடன் இணைந்து 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அவரது இரண்டாவது படத்திலேயே முன்னணி நடிகரான விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை என்பதால் இப்படத்திற்கு பின்பு பூஜா ஹெக்டேவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
தமிழிலிருந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாகவும் இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சியாக போட்டோ சூட் செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.