அடக்கொடுமையே.. நடிகை பூஜா ஹெக்டே மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போகிறாரா?.. நல்லாத்தானே இருக்காங்க.. சர்ச்சையை கிளப்பும் தகவல்..!!actress-pooja-hedge-plastic-surgery-in-her-nose-controv

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கதாநாயகிகள் சினிமாவில் அழகாக இருந்தால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காக தங்களது அழகை மெருகூட்ட ஒவ்வொரு நாளும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

Actress Pooja Hedge

சிலர் அறுவை சிகிச்சைகள் செய்து புதுப்பொலிவையும் காட்டுகிறார்கள். சில நேரம் அறுவை சிகிச்சை தோல்வியடைந்து அழகை இழந்த சில நடிகைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல கதாநாயகியாக இருக்கும், பூஜா ஹெக்டே அழகுக்காக அறுவை சிகிச்சை செய்ய தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இவர் தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜயுடன் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

Actress Pooja Hedge

அதோடு சிலர் பூஜாவின் மூக்கு அழகாக இல்லை என்ற சர்ச்சையை கிளப்பி வருவதால், அதனை அறுவை சிகிச்சை மூலமாக பூஜா சரி செய்ய இருப்பதாகவும், விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் என்ற தகவலும் பரவி இருக்கிறது. இந்த தகவல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், பூஜா ஹெக்டே விளக்கமளித்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.