அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரியா?.. சர்ச்சை தகவலுக்கு பதறி விளக்கமளித்த பூஜா ஹெக்டே..! உண்மை இதுதான்..!!
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியில் முடிந்தது.
மேலும் பூஜாவின் மூக்கு அழகாக இல்லை. அதனால் அவர் வெளிநாட்டுக்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வந்தது. இதற்கு தற்போது பூஜா விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "சமீபகாலமாகவே முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த வதந்திகள் பரவிவருகிறது. நான் மூக்கு அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் பேசுகிறார்கள். இது உண்மை கிடையாது. எனது உடம்பில் எந்த இடத்திலும் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. எனக்கு அதற்கான அவசியமும் கிடையாது.
இது போன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம். தற்போது நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அடுத்து மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிக்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன்மூலம் பூஜா ஹெக்டே எவ்விதமான மூக்கு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.