BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
4 மாசம் ஆச்சு! நான் செத்தாதான் அதை செய்வீங்களா! ஆவேசத்தில் கொந்தளித்த பிரபல இளம்நடிகை! ஏன்? என்ன நடந்தது?
தான் பாலியல் புகார் அளித்து நான்கு மாதங்களாகியும் இயக்குனர் அனுராக் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நடிகை பாயல் கோஷ் பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ்.மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் எனவும், 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தாக பெருமையாக கூறியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக மும்பை ஓஷிவாரா காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு சில நடிகைகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது இதுகுறித்து மீண்டும் நடிகை பாயல் கோஷ் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அனுராக் காஷ்யப் மீது நான் புகார் கொடுத்து 4 மாதங்களாகிவிட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்து விட்டேன். ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் நான் இறந்துபோனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.