"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
ஹெல்ப் ப்ளீஸ்.. வளர்த்த நாயை கண்டுபிடித்து தந்தால் பரிசு.! எத்தனை லட்சம் தெரியுமா?..! பிரபல நடிகை கண்ணீருடன் பரபரப்பு அறிவிப்பு..!!
வீடுகளில் நம்மால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவை போன்றவை நமது அங்கமாக மாறிவிடுகிறது. இதனால் பல திரைப்பிரபலங்களும் விலை உயர்ந்த நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகின்றனர்.
மனிதர்களை விட அவைகளின் மீது பாசம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வைத்துவிடுவது இயல்பு. இந்த நிலையில், ஒருவர் தனது நாயை காணவில்லை என்று கூறி, அதனை கண்டுபிடித்து தந்தால் சன்மானம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் பாரிஸ் ஹில்டன் நியூயார்க் நகரத்தில் வசித்து வருகிறார். இவர் தனது நாயை காணவில்லை என அறிவிப்பு வெளியிட்டு அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10,000 டாலர், இந்திய மதிப்பில் 8 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.