சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
நடிகை ஓவியாவை சந்தித்த பிக்பாஸ் சீசன்5 பிரபலம்!! அட யாருனு பார்த்தீங்களா..!!
நடிகை ஓவியாவை சந்தித்த பிக்பாஸ் சீசன்5 பிரபலம்!! அட யாருனு பார்த்தீங்களா..!!

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பெரிய படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் நடித்த 90 ML படம் இரட்டை அர்த்தம், புகை பிடித்தல் என பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதன் பின் பெரிதும் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன்5 போட்டியாளரான நடிகர் வருண் மற்றும் ஓவியா இருவரும் சந்தித்து இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்...