தமிழகம் சினிமா

'கப்புனு குடிச்சனா குப்புனு ஏறிடிச்சு' வெளியான நடிகை ஓவியாவின் புதிய படத்தின் ட்ரெய்லர்.!

Summary:

actress oviya - 90ml after new movie - kanesa meendum santhippom

தமிழில் சமீபத்தில் அனிதா உதூப் இயக்கத்தில் உருவான திரைப்படம் 90ml. இதில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை  ஓவியா நடித்திருந்தார். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்ருந்தார். மேலும் ட்ரைலர் வெளியானதிலிருந்து சர்ச்சையை கிளப்பிய இந்த திரைப்படம் கடந்த மார்ச்-1ஆம் தேதி வெளியாகியது.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. மேலும் இப்படம் வெளியாகி சில ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பலர் இந்த திரைப்படம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக அமைத்தது என கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இயக்குனர் ரதீஷ் எராட்டே இயக்கத்தில் ப்ரித்விராஜன், ஓவியா, தேவிகா நம்பியார், சிங்கம் புலி, ஐ எம் விஜயன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வரும் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


Advertisement