"அந்த விஷயத்தில் சாய் பல்லவியை தான் பாலோவ் செய்கிறேன்!" இளம் நடிகை ஓபன் டாக்!
2015ஆம் ஆண்டு "பிரேமம்" மலையாளத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சாய் பல்லவி. மேலும் இவர் ஒரு நடனக் கலைஞரும் ஆவார். முன்னதாக சாய் பல்லவி தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
மலையாளம் மற்றும் தமிழில் வெளியான பிரேமம் திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இவர் பெரும்பாலும் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த "கார்க்கி" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சாய் பல்லவி குறித்து இளம் நடிகை ஹிருத்திகா ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அவர், "எனக்கு சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது. சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறேன்.
எனக்கு சாய் பல்லவியை மிகவும் பிடிக்கும். அவர் கிடைத்த எல்லா படங்களிலும் நடிக்க மாட்டார். அவரைப் போல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் நான் அவரைப் பாலோவ் செய்கிறேன். என் ரோல் மாடல் சாய் பல்லவி தான்' என்று கூறியுள்ளார். இன்று இவர் நடித்துள்ள "சவுண்ட் பார்ட்டி" திரைப்படம் வெளியாகியுள்ளது.