சினிமா

உடல் எடை குறைந்து பழைய தோற்றத்துக்கு மாறிய நித்யா மேனன்! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

Summary:

Actress nithya menon fat to look photos

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறு வயதில் இருந்தே பல்வேறு மொழி படங்களில் நடித்துவருகிறார்.

காஞ்சனா 2 , 24 , மெர்சல் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. சைக்கோ, கொலம்பி, தலைவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் நடிகை நித்யா மேனன்.

பொதுவாக நடிகைகள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. இந்நிலையில் காஞ்சனா 2 படத்திற்கு பிறகு உடல் எடை சற்று கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக மாறினார் நடிகை நித்யா மேனன். சமூக வலைத்தளங்களில் வெளியான இவரது தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது தீவிர உடற் பயிற்சி, டயட் மூலம் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் நடிகை நித்யா மேனன். அவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement