நடிகை நிக்கி கல்ராணி காதலர் இவர்தானா? கல்யாணம் எப்பொழுது தெரியுமா? அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!

நடிகை நிக்கி கல்ராணி காதலர் இவர்தானா? கல்யாணம் எப்பொழுது தெரியுமா? அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!


actress nikki kalrani ralk about marriage

தமிழ் சினிமாவில்  GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இவர் தான் நடித்த முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

அதனைத்தொடர்ந்து நிக்கி கல்ராணி சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் படம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த சின்ன மச்சான் பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி தற்போது சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

nikki kalrani

இவ்வாறு சினிமாவில் பிசியாக இருக்கும் அவர் தற்போது பேட்டி ஒன்றில் முதன்முறையாக தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார்.  அப்பொழுது அவர் கூறுகையில், நான் சென்னையை சேர்ந்த ஒருவரைதான் காதலிக்கிறேன். நாங்கள் இருவரும் 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் ஆனால் அவரை பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர் யாராக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.