நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் நடந்த திருட்டு! சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி! பரபரப்பு சம்பவம்!!

Summary:

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு! சிசிடிவியில் சிக்கிய குற்றவாளி! பரபரப்பு சம்பவம்!!

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து அவர் யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா மற்றும் அண்மையில் வெளிவந்த ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், தனது வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன் நியமித்ததாகவும், அவர் தனது ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் தனுஷின் அம்மாவும் தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் நிக்கி கல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் போலீசார்கள் திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை 
கண்டுபிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு நிக்கி கல்ராணியின் விலையுயர்ந்த கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்கி கல்ராணி மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என புகாரை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது.


    


Advertisement