சினிமா

பிரபல நடிகருடன் நடிகை நிக்கி கல்ராணி காதல்..? விரைவில் திருமணம்..! கிசுகிசுக்கும் திரையுலகம்..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

Summary:

Actress nikki galrani loves actor aadhi

நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்துவருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிருகம் என்ற தமிழ் படம்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானானவர் நடிகர் ஆதி. மிருகம் படத்தை அடுத்து ஈரம், அய்யனார். ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஆதி. மேலும் தெலுங்கில் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்துவருவதாக கூறப்படுகிறது. இருவரும் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.  இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவமும்  நடந்துள்ளது. நடிகர் ஆதி சில நாட்களுக்கு முன் அவரது தந்தையின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கு என்பதால் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படாதநிலையில் நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருந்தார்.

இந்த சம்பவம் மூலம் இருவரும் காதலிப்பது உண்மைதான் எனவும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையுலகினர் கூறிவருகின்றனர்.


Advertisement