சினிமா

கவர்ச்சி குத்தாட்டம் போட்டு, இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி நிகிதாவின் தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா!!

Summary:

Actress nikitha latest photo viral

தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சரோஜா என்ற திரைப்படத்தில் கோடான கோடி என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நிகிதா. 

மும்பையை பூர்வீகமாக கொண்ட நிகிதா 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் ஹாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பைப் பெற்றார். பின்னர்  அவர்  குறும்பு என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


 
அப்படத்தைத் தொடர்ந்து நிகிதா சரத்குமாருடன் இணைந்து சத்ரபதி என்ற திரைப்படத்திலும் சிபிராஜ்க்கு  ஜோடியாக வெற்றிவேல் சக்திவேல் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் சுகன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிகிதா தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் நிகிதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். 


Advertisement