அம்புட்டு அழகாக இருந்த நஷ்ரியாவா இது? என்ன இப்படி மாறிட்டாரு? வைரலாகும் புது புகைப்படம்.

அம்புட்டு அழகாக இருந்த நஷ்ரியாவா இது? என்ன இப்படி மாறிட்டாரு? வைரலாகும் புது புகைப்படம்.


actress-nazriya-latest-look-photo

நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த நடிகை நஷ்ரியா. ராஜா ராணி படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம்.

ராஜா ராணி படத்தை அடுத்து நையாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஏற்பட்ட ஒருசில சர்ச்சைகளை அடுத்து சினிமாவில் இருந்து விலகி பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார் நஷ்ரியா.

Nashriya

திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு விலகியே இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார். இந்நிலையில் தனது முடியை வெட்டி விதியசமான தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நஷ்ரியா.

மேலும் அந்த பதிவில் வலிமை என டாக் செய்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான வலிமையில் நஷ்ரியா நடிக்க உள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.