யோகிபாபு மீதுள்ள பாசத்தால் நடிகை நயன்தாரா செய்த செயல்! குஷியில் நடிகர் யோகிபாபு!

யோகிபாபு மீதுள்ள பாசத்தால் நடிகை நயன்தாரா செய்த செயல்! குஷியில் நடிகர் யோகிபாபு!



actress-nayanthara-said-ok-for-yogi-babu-in-ira-movie

யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார் யோகி பாபு. சர்க்கார் இசை வெளியீடு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது யோகிபாபுவின் அசுர வளர்ச்சி தன்னை பிரமிக்கவைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகர் யோகிபாபுவின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. கல்யாண வயசுத்தான் வந்துடூச்சி டி.. வெயிட் பண்ணவா? இந்த பாடலை கேட்டவுடன் எல்லோரும் மனதிலும் நயன் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லை யோகி பாபு வந்து விடுகிறார். டூயட் இல்லை, கிஸ்ஸிங் சீன் இல்லை ஆனாலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவின் ஜோடி யார் என்றால் யோகி பாபு தான் என்பார்கள்.

nayanthara

இந்நிலையில் நயன் இரட்டை வேடத்தில் அசத்த வரும் ஐரா படத்திலும் யோகி பாபு நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி வெளியான நேரத்திலிருந்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடுத்த வெற்றி கூட்டணிக்கு ரெடி, வெய்டிங் என்று மீம்ஸ்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ஐரா படத்தின் போஸ்டரும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜரா படம் வரும் டிசம்பர் மாத திரைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara

அதே போல் இந்த படத்தில், யோகி பாபு நடிப்பது குறித்து நயன் தாராவிடம் இயக்குனர் சார்ஜா கூறியதும், நயன் "என்னிடம் கேட்கவே வேண்டாம்.. யோகிதானா தாராளமாக நடிக்க வையுங்கள் " என்றாராம்.