சினிமா

அடேங்கப்பா.. 54 வயசுலயும் நடிகை நதியா இவ்ளோ இளமையோடு இருக்க இதுதான் காரணமா! அவரே வெளியிட்ட வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெ

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நதியா. அவர் 80, 90'ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கினார். மேலும் அப்போதைய இளம் பெண்கள் அவரது அனைத்து ஸ்டைல்களையும் பின்பற்றினர். நடிகை நதியா பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். 

நதியா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நதியா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது துள்ளலான இளமைதான்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நதியா அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் உங்களது இளமைக்கு இதுதான் காரணமா? என ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


Advertisement