"அவர் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியல., இதயம் கலங்குது" - கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகை நமீதா உருக்கம்.!actress-namitha-sad-post-about-vijayakanth-dead

 

தமிழ் திரையுலகில் மூத்த நடிகரும், சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமானவர் விஜயகாந்த். 

Latest news

இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மற்றும் வீட்டிலேயே ஓய்வு என இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.

Latest news

அவரின் மறைவுக்கு பலரும் தங்களின் உருக்கமான நினைவுகளை இரங்கலாக பகிர்ந்த நிலையில், நடிகை நமிதாவும் தனது இரங்கலை கூறியுள்ளார். அந்த பதிவில், "இந்த வருடம் இயக்குனர் சித்திக் இயற்கை எய்தினார். தற்போது கேப்டனும் இல்லை. 

எனது முதல் படத்தின் தூண்களாக இருந்த இருவரும் தற்போது இல்லை என்பது இதயத்தை கலங்கச் செய்கிறது. கேப்டனின் குணத்தை அருகில் இருந்து பார்த்து வியந்தவள் நான். அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.