சினிமா

அஜித்தை நடிகை நளினி இப்படி புகழ என்ன காரணமாக இருக்கும்?

Summary:

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வசம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது. இப்படி அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் தருணத்தில் அவரை பற்றிய வேறொரு செய்தி கேட்டால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமடைவார்கள். அப்படி ஒரு செய்தி தான் இது.

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். ஆனால் அவர் அதை பற்றி பெருமையாக கருதி ஒருபோதும் கர்வம் கொண்டதில்லை. 
பொதுவாகவே அஜித் மிகவும் அமைதியானவர். சக நடிகர்களையும், நடிகைகளையும் மிகவும் மரியாதையுடன் நடத்த கூடியவர். 

ajith with fans க்கான பட முடிவு

மேலும் படத்தில் தன்னோடு வேலை செய்யும் சக ஊழியர்களிடமும் பாசமாக நடந்துகொள்ளக்கூடியவர்.

அதற்கு உதாரணம் தான் இந்த பதிவு:

சமீபத்தில் பிரபல நடிகை நளினி அஜித்தை ஹைதாராபாத்தில்  சந்தித்துள்ளார். அப்போது அவர் நளினிக்கு மிகுந்த மரியாதையை கொடுத்துள்ளார்.

actress nalini க்கான பட முடிவு

அதை கண்ட நளினி அவர் இருக்கும் உயரத்திற்கு எனக்கு இவ்வளவு மரியாதையை தரவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அவர்கொடுத்த மரியாதை என்னை மெய்மறக்க வைத்துவிட்டது என்று அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.


Advertisement