சினிமா

வாவ்.. ஜோடி சூப்பர்! செம கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்த நக்ஷத்ராவின் திருமணம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

Summary:

வாவ்.. ஜோடி சூப்பர்! கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை நக்ஷத்ராவின் திருமணம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நக்ஷத்ரா. இவர் கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் தொகுப்பாளினி நக்ஷத்ரா ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் சன் டிவியில் குஷ்பூ நடிப்பில் ஒளிபரப்பான லட்சுமி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாயகி சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நக்ஷத்ரா தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நக்ஷத்திராவிற்கு அண்மையில் ராகவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்குகள் அனைத்தும் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அவர்களது திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றுள்ளது. அந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement