நடிகை மும்தாஜிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை தூண்டிய பிக்பாஸ் பிரபலம்!. நடிகை மும்தாஜ் ஓப்பன் டாக்!.

நடிகை மும்தாஜிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை தூண்டிய பிக்பாஸ் பிரபலம்!. நடிகை மும்தாஜ் ஓப்பன் டாக்!.



actress mumtaj talk about marriage and child


நடிகை மும்தாஜ், சினிமாத்துறையில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த மும்தாஜிற்கு தென்னிந்தியாவில் அதிகப்படியான வரவேற்ப்பு இருந்தது. 

இதனையடுத்து நடிகை மும்தாஜிற்கு  படவாய்ப்புகள் குவிந்த நிலையில், இவரின் உடல் பருமன் அதிகமானதால், படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தன. பிறகு, சில B கிரேடு படங்களிலும் நடித்தார்.அதன் பிறகு ஐட்டம் சாங்கிற்கு மட்டும் நடித்துவந்தார்.

mumtaj

37 வயது நிறைந்திருக்கும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால், மார்கெட் இழந்த நடிகைகள் போல நடிகை மும்தாஜும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

இறுதியாக பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜிற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு விழாவை கூட கொண்டாடினர். 

இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த நிலையில் விரைவில் திருமணம் ஆக உள்ளது என்ற செய்தி, கடந்த சில நாட்களாக பரவி வந்தது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மும்தாஜிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை நீங்கள் மறக்காத விஷயம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது.

mumtaj

அதற்கு பதிலளித்த நடிகை மும்தாஜ், எனக்கு பேமிலி வீக் தான் மிகவும் பிடித்திருந்தது. விஜியின் மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று எனது வீட்டில் உள்ள குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

எனக்கு அப்போது விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்றியது என்றார். பின்னர் திருமணம் குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்க்கு, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை நான் ஏதோ உளறுகிறேன் என்று மழுப்பிவிட்டார்.