வாவ்.. நடிகை மிருணாள் தாக்கூரின் சகோதரியை பார்த்திருக்கீங்களா.! அவரை மாதிரியே இருக்காரே.! வைரல் புகைப்படம்!!

வாவ்.. நடிகை மிருணாள் தாக்கூரின் சகோதரியை பார்த்திருக்கீங்களா.! அவரை மாதிரியே இருக்காரே.! வைரல் புகைப்படம்!!


actress-mirunal-tagore-with-sister-photo-viral

 மராட்டிய சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹிந்தியில் love sonia என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து ஏராளமான படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர்  துல்கர் சல்மானுடன் சீதாராமம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் இந்தியளவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் நடிகர் நானியுடன் ஹாய் நானா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் மற்றும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Mirunal tagore

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் அவரது சகோதரி லோச்சன் தாகூருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லோச்சன் தாகூர் பிரபலமான ஒப்பனை கலைஞராம்.

Mirunal tagore