எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
ப்பா.. அவரா இது! வெறித்தனமாக கிக் பாக்ஸிங் செய்யும் சீதாராமம் நாயகி.! வேற லெவல் வீடியோ!!
மராட்டிய சினிமாவில் அறிமுகமாகி, பின் ஹிந்தியில் வெளிவந்த love sonia என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். அவர் பாலிவுட்டில் படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து மிருணாள் தாக்கர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்த சீதாராமம் படம் அவரை இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது.
மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படங்கள்
மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் நடிகர் நானியுடன் ஹாய் நானா படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். பின் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் அண்மையில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. சீதாவா இது.! ஓபன் நெக் உடையில் இளசுகளை இம்சை செய்யும் நடிகை மிருணாள் தாக்கூர்!!ஹாட் புகைப்படங்கள்!!
வெறித்தனமாக கிக் பாக்ஸிங்
நடிகை மிருணாள் தாக்கர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் மற்றும் கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: என்னது.. பிரபல பாடகருடன் டேட்டிங்கில் இருக்காரா நடிகை மிருணாள் தாக்கூர்.! தீயாய் பரவும் வீடியோ..