என்னது.. பிரபல பாடகருடன் டேட்டிங்கில் இருக்காரா நடிகை மிருணாள் தாக்கூர்.! தீயாய் பரவும் வீடியோ..

என்னது.. பிரபல பாடகருடன் டேட்டிங்கில் இருக்காரா நடிகை மிருணாள் தாக்கூர்.! தீயாய் பரவும் வீடியோ..



actress-mirunal-tagore-dating-with-singer-batsha-newsvi

2014 ஆம் ஆண்டு மராட்டிய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் ஹிந்தியில் love sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் உடன் இணைந்து சீதாராமம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்து பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவருக்கு பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். தொடர்ந்து அவர் தெலுங்கில் நடிகர் நானியுடன் இணைந்து ஹாய் நானா, ஃபேமிலி ஸ்டார் மற்றும் ஹிந்தியில் பூஜா மேரி ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

mirunal takur

இந்நிலையில் மும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் தீபாவளி பார்ட்டி நடைபெற்றுள்ளது. அதில் மிருணாள் தாக்கூர் கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த பார்ட்டியில் ராப் பாடகரான பாட்ஷாவும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக கைகோர்த்து சென்றுள்ளனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து பாடகர் பாட்ஷா, நீங்கள் நினைப்பது உண்மையில்லை என அதற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.