
Actress megna tweet about news spread she got twin baby
பிரபல நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தனது 39 வயதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. அவர் கணவர் இறந்த போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மேக்னாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்துள்ளது.
இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்துள்ளனர்.
Fake 😊 pic.twitter.com/QeMHT2NpzQ
— MEGHANA RAJ SARJA (@meghanasraj) September 24, 2020
இந்நிலையில் மேக்னா இது பொய்யானது என புகைப்படத்தை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் சிலர் போட்டோ ஷூட் செய்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை யாரும் நம்ப வேண்டாம். என்னைப் பற்றி எனது குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் எதுவாக இருந்தாலும் நேரடியாக நானே கூறுவேன் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement