சினிமா

சித்தி 2 தொடரில் வில்லியாகும் பிரபல நடிகை! அவரே வெளியிட்ட அசத்தலான தகவல்! ரசிகர்கள் வாழ்த்து!

Summary:

Actress Meera krishnan act in siddi 2 villi character

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொலைக்காட்சி நிறுவனங்களும்  பழைய தொடர்களை ஒளிபரப்பிவந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் வெளிமாநிலங்களில் இருக்கும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில் உள்ள சிக்கல், உடல்நிலை போன்ற காரணங்களால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.  இந்த நிலையில் அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டு மிகவும் பாதுகாப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் சித்தி 2. கொரோனா பிரச்சினையால் இந்த தொடரிலும் சில நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் ராதிகா சரத்குமார் அறிவித்து, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சித்தி 2 தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில், நடிகை மீரா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement