முக்கியமான நாளில் கணவரை இழந்து தவிக்கும் நடிகை மீனா! வேதனையோடு ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

முக்கியமான நாளில் கணவரை இழந்து தவிக்கும் நடிகை மீனா! வேதனையோடு ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!


actress-meena-vidyasagar-wedding-day

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 பெங்களூருவைச் சேர்ந்த கணினி பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். 

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28-ந் தேதி காலமானார். அவரது திடீர் மறைவு மீனாவின் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்தது. ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று ஜூலை 12 நடிகை மீனா மற்றும் வித்யாசாகருக்கு 13வது திருமண நாள். இந்த நாளில் நடிகை மீனா கணவரை இழந்து தவித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு திருமண நாள் அன்று மீனா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நீ என் வாழ்வில் வானவில் போல வந்து, வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய்.

சேர்ந்து இருப்பது தான் அழகானது. எனக்கு பிடித்த இடமும் அதுதான்.
நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என உருக்கமாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பகிர்ந்து நெட்டிசன்கள் நடிகை மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.