சினிமா

தவறான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்.! கவர்ச்சி நடிகை மாயா கொடுத்த அதிர்ச்சி புகார்.!

Summary:

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. முன்னாள் முதல்வர்

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் நடிகை மாயாவிற்கு விக்கி (35) என்ற மகனும், 20 வயதில் மகளும் உள்ளனர். 

மகனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மாயா, தனது மகளோடு தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை மாயா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனது மகன் விக்கி சிலரிடம் பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது. அந்த பணத்தை அவர் திருப்பி தராததால் பணம் கொடுத்தவர்கள் எனது வீட்டுக்கு வந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனது வீட்டிற்கு வந்து மகளை கையை பிடித்து இழுத்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன், விக்கி வாங்கிய தொகையை நான் தான் தரவேண்டும் என்றும் மிரட்டி சென்றுள்ளனர். அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.


Advertisement