சினிமா

காதல் மன்னன் திலோத்தம்மா தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

actress manu latest photo viral

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல் மன்னன். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. அப்படத்தில் அவர் நடித்த திலோத்தமா கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்ல. 

மேலும் நடிகை மானு சந்தீப் துரா என்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது நடிகை மானு தான் அவரை கவனித்துக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜா நடிப்பில் வெளியான என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மானுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் காதல் மன்னன் திலோத்தம்மாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

 


Advertisement