முதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... வைரலாகும் புகைப்படம்!!

முதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... வைரலாகும் புகைப்படம்!!



Actress malavika menan family photo viral

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் நடிகர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து மாறன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வ போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார்.

malavika menan

தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் மாளவிகாவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் எது என்று கேள்வி எழுப்பிதற்கு மாளவிகா தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு எல்லாமே எனது குடும்பம் தான் என்று கூறியுள்ளார்.