சேரி என்றால் இதுதாங்க அர்த்தம்.! பற்றி எரிந்த சர்ச்சை.! நடிகை குஷ்பு அளித்த புது விளக்கம்!!

சேரி என்றால் இதுதாங்க அர்த்தம்.! பற்றி எரிந்த சர்ச்சை.! நடிகை குஷ்பு அளித்த புது விளக்கம்!!



actress-kusboo-explain-to-the-cheri

நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தபோது, எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளானபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத குஷ்பு, தற்போது திரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக விமர்சனம் செய்திருந்தார்

இதற்கு நடிகை குஷ்பு, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது என கூறி பதிலளித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையானது. அவர் சேரி மொழி என பயன்படுத்தியதற்காக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர். இந்த நிலையில் நடிகை குஷ்பு சேரி என்பதற்கு விளக்கம் கொடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Cheri

அதில் அவர் நான் வெளியிட்ட பதிவில் பயன்படுத்திய மொழி தொடர்பாக சீறிவரும் இந்த கூட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. பெண்களுக்கான பிரச்சனைகளின் போது இந்தக் கூட்டம் அமைதி காத்தது. படித்தும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இதுகுறித்து நான் சொல்லித் தர விரும்புகிறேன்.

 சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர், நேசிப்பவர் என அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக அந்த பதிவில் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். நான் எப்பொழுதுமே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக முன்னணியில் நிற்பேன் எனக் கூறியுள்ளார்.