
அட நடிகை குஷ்புவா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகை குஷ்பு, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி குஷ்பு ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். குஷ்பு நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். தற்போது குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றி இருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வாயடைத்துபோயுள்ளனர். அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் உள்ளார். தற்போது குஷ்புவின் அழகிய தோற்றம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Advertisement
Advertisement