அடஅட..இவரா! சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யாருன்னு பார்த்தீங்களா! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

அடஅட..இவரா! சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை! யாருன்னு பார்த்தீங்களா! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!



actress keerthi sanon heroine in simbu movie

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

 அதனைத் தொடர்ந்து சிம்பு கைவசம் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

Keerthi sanon

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கீர்த்தி சனோன் பிரபாஸ் நடிப்பில், ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகிவரும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்தத் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.