அப்போ.. கீர்த்தி சுரேஷ் இல்லையா! ராமராக அவதாரமெடுக்கும் பிரபாஸின் சீதாவாக போவது இந்த நடிகைதானா?

அப்போ.. கீர்த்தி சுரேஷ் இல்லையா! ராமராக அவதாரமெடுக்கும் பிரபாஸின் சீதாவாக போவது இந்த நடிகைதானா?



actress-keerthi-sanon-going-to-act-in-adhipurush-as-see

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

மேலும் இப்படம் ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகுவதாக கூறப்படுகிறது.  இந்தப் படத்தில் பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான  நடிகர் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். மேலும் அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார். இந்நிலையில் அதிபுருஷ் படத்தில் சீதாவாக நடிக்கப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது.  

மேலும் கீர்த்தி சுரேஷு சீதாவாக நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், சீதையாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்தில் ராமனின் தம்பியாக லட்சுமணனாக நடிக்க இந்தி நடிகர் சன்னி சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.