சத்தமேயின்றி சிம்பிளாக திருமணத்தை முடித்த சிங்கப்பெண்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!

சத்தமேயின்றி சிம்பிளாக திருமணத்தை முடித்த சிங்கப்பெண்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!


actress-kayathri-reddy-got-marriage-with-lover-photo-vi

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் காயத்ரி ரெட்டி திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டேன் என புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார்.  இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு உருவானது. இந்தப் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளுள் ஒருவராக நடித்து பிரபலமானவர் காயத்ரி ரெட்டி. மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிகில் படத்தில் இவர் மாரியம்மா என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் 
நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டஃப்பான போட்டியாளராக வலம் வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு திடீரென தனது காதலருடன் சத்தமேயின்றி  திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.