24 வயதில் கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்.. மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்

24 வயதில் கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்.. மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்


Actress Kayal anandhi marriage photos

பிரபல நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் அழகிய ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கயல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக பிரபலமானவர் நடிகை ஆனந்தி. கயல் படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து கயல் ஆனந்தி என்றே அடையாளம் காணப்படுகிறார்.

கயல் படத்தை அடுத்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சண்டிவீரன், விசாரணை, த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவருக்கு தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

Kayal Anandhi

இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி நேற்று சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு வீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகினருக்கு இந்த திருமணத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மூடர் கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீனின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரைதான் கயல் ஆனந்தி திருமணம் செய்துள்ளார். சாக்ரடீஸ் இதற்கு முன்னதாக அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னிசிறகுகள் போன்ற சில படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். விரைவில் புதுப்படம் ஒன்றை அவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Kayal Anandhi

24 வயதில் திடீரென கயல் ஆனந்திக்கு திருமணம் முடிந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் புதுமண ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Kayal Anandhi