நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
விஜய் டீவியை விட்டு வெளியேறிய பிரபலம்! என்ன காரணம் தெரியுமா?

TRP போட்டியின் காரணமாக ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி மத்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற புது தொடரை விஜய் டிவி அறிமுகம் செய்தது. நான்கு சகோதரர்களின் பாச போராட்டம், அண்ணி மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
தொடரில் பெரும்பாலும் நாம் அதிகம் பார்த்த முகங்கள்தான் நடிக்கின்றனர். இந்த சீரியலில் முதலில் கவிதா ஒரு கேரக்டரில் நடிப்பதாக காட்டினர். ஆனால் அவர்க்கு பதில் தற்போது வேறொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கவிதா ஏற்கனவே விஜய் டீவியில் ஒளிபரப்பான நீலி என்ற தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர்.
கவிதா கன்னடத்தில் தொடங்க இருக்கும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாராம். அதனால் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறேன் மற்றொரு புதிய தமிழ் சீரியலில் பிறகு என்னை பார்க்கலாம் என்கிறார்.