பாதிரி ஒரு மாதிரி; ஆஸ்கர் லெவலில் கள்ளகாதலிக்கு திருமணம்.. மன்மத பாதிரியாரை கலாய்த்தெடுத்த கஸ்தூரி சங்கர்.!Actress Kasthuri Shankar Troll Church Father Benedict Anto

 

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள பாதிரியாரின் காம லீலைகள் குறித்த விவகாரத்தில் கஸ்தூரி சங்கர் ட்விட் போட்டு கலாய்த்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்த பெனடிக் ஆண்ட்டோ (Benedict Anto), அரசியல் கட்சியிலும் பொறுப்பாளராக இருந்து வந்தார். 

இவர் தனது சர்ச்சுக்கு வரும் இளம்பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை என அனைவரையும் வாட்சப் குழுவில் இணைத்து, பாலியல் ரீதியான பேச்சுக்கள் பேசி தனது வலையில் சிக்கும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

Kasthuri Shankar

பல பெண்களை அவர் மிரட்டியும் பாலியல் இச்சைக்கு இணங்கவைத்த நிலையில், சமீபத்தில் அவரின் மீதான குற்றசாட்டுகள் குறித்து அடுத்தடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த, பாதிரியார் பெனடிக் தலைமறைவாகினர்.

இதற்கிடையே, பாதிரியார் பெண்களுடன் தனிமையில் இருப்பது தொடர்பான பல விடியோக்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில், பாதிரியாரின் லீலைகளை கலாய்த்துள்ள நடிகை கஸ்தூரி சங்கர், 'பாதிரி  ஒரு மாதிரி ' ன்னு ஒரு சூப்பர் ஸ்க்ரிப்ட்டு.... எடுத்து வுட்டா pan india லெவல்ல அலை மோதுவாய்ங்க 😁😛 அதுலயும் அ‌ந்த கள்ளக்காதலிக்கு கல்யாண matterலாம் oscar levelலு! என கூறியுள்ளார்.