சினிமா

ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய முதல் நாயகி! யார் தெரியுமா?

Summary:

Actress kashthoori supports sri reddy

பட வாய்ப்பு வேண்டுமென்றால் தன்னுடன் படுக்க வேண்டும் என்று பலரும் தன்னை ஏமாற்றியதாக கூறி அரை நிருவாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர் ராணாவின் தம்பி, நடிகர் நாணி என பல பிரபலங்கள் மீது அடுத்தடுத்து புகார்களை அல்லி வீசினார்.

தற்போது சென்னை வந்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி கோலிவுட் திரைப்பிரபலங்கலான, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் .சி, லாரன்ஸ், நடிகர் சந்தீப் கிஷன், ஆதி என பலரது பெயரை முன்வைத்து வரும் இவர், தொடர்ந்து பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பெயரை கண்டிப்பாக வெளியிடுவேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆதாரம் இன்றி இவர் பலரது பெயரை டேமேஜ் செய்துவருவதால் இவரதுமேல் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிலதினங்களுக்கு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி பேசுகையில், நடிகை ஸ்ரீ ரெட்டி ஆதாரம் இன்றி பேசுவதாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னிடம் 90%  ஆதாரம் உள்ளதாகவும். விரைவில் அதை தான் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு கோலிவுட் திரையுலகிலாவது நியாயம் கிடைக்கும் என சென்னைக்கு வந்துள்ள இவருக்கு முதல் முறையாக தமிழ் திரையுலகை சேர்ந்த, பிரபல நடிகை கஸ்தூரி ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து நடிகை கஸ்தூரி அவருடைய ட்விட்டர் பகுதியில் " எக்கச்சக்கமானவங்க #tamilleaks பத்தி கேட்குறாங்க.என் வாட்சப்  முழுக்க மீடியாவின் #srireddy கேள்விகளால் நிரம்பி வழிகின்றது. மேலும்  நான் ஸ்ரீ ரெட்டி  பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி பார்த்தேன். தரமான , நேர்மையான நேர்காணல். அந்த பொண்ணு கண்ணுல உண்மை இருக்கு. I feel sorry for her.  I believe her. என கருத்து தெரிவித்துள்ளார். 

இதுவரை பல தொலைக்காட்சிகள், மற்றும் ஊடகங்கள் ஸ்ரீரெட்டி பற்றி பேசிய போது... ஒரு பிரபலம் கூட இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருந்த நிலையில் தற்போது இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேசியுள்ளதை பலர் வரவேற்றுள்ளனர்


Advertisement