சினிமா

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள்; பிரபல நடிகையின் வேதனையான பின்னணி

Summary:

actress kani kusruti about cinema life

கேரளாவில் இருந்து தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனி குஸ்ருட்டி. சமூக ஆர்வலர்களான இவரது பெற்றோர்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்துக் கொள்வதை எதிர்த்து போராடியவர்கள். அவர்களது பின்னாலிருந்த பெயரினையும் நீக்கிவிட்டனர்.

மேடை நாடகங்கள் குறும்படங்கள் என நடித்து சினிமாவில் படிப்படியாக அடியெடுத்து வைத்தவர் கனி. இவர் தமிழில் பர்மா, பிசாசு போன்ற படங்களின் மூலம் தன் திறமையை தமிழ் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். மேலும் இவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பு 'மா' எனும் குறும்படம். சிறுவயதிலேயே கர்ப்பமான சிறுமியின் தாயாக மிகவும் அருமையாக நடித்திருப்பார் கனி.

kani kusruti க்கான பட முடிவு

சமீபத்தில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்ட கனி, மலையாள படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு சில பிரபலங்கள் கொடுத்த பாலியல் தொல்லைகளால் நான் பல்வேறு படவாய்ப்புகளை இழந்துள்ளேன். இதில் மேலும் அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவெனில் நான் அவர்களுடன் ஒத்துப் போக எனது தாயாரிடமே அவர்கள் நேரடியாக பேசி என்னை அனுப்பிவைக்குமாறு கேட்பதுதான்.

இது போன்ற தொல்லைகளால் சினிமாவை விட்டு விலகி மீண்டும் நாடகங்களில் நடிக்க சென்ற கனி, தற்பொழுது கேரளா திரையுலகில் துவங்கப்பட்டுள்ள நடிகைகளுக்கான அமைப்பின் மூலம் மீண்டும் சினிமாவில் பாதுகாப்பாக நடிக்க முடியும் என கருதுகிறார்.


Advertisement