தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஹீரோயின்கிட்ட மட்டும் ஏன் இப்படி கேட்குறீங்க! செம கோபத்தில் நடிகை காஜல்!! ஏன் என்ன காரணம் தெரியுமா??
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த சில காலங்களுக்கு முன்பு கொரோனா லாக்டவுனில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்தும் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அவரது நடிப்பில் ஹே சினாமிகா, மொசகல்லு, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்கள உருவாகி வருகிறது.
மேலும் சமீபத்தில் காஜல் நடிப்பில் உருவான லைவ் டெலிகாஸ் என்ற வெப்தொடர் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காஜல், திருமணத்துக்கும், தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணம் எனது சொந்த வாழ்க்கை. சினிமா எனது தொழில். எனக்கு திருமணம் ஆனதிலிருந்து நிறைய படங்கள் வந்து கொண்டுள்ளது. திருமணமான பிறகும் பெண்கள் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் திருமணமாகிவிட்டது. ஏன் வேலைக்கு போகிறீர்கள் என யாரும் கேட்பதில்லை.
ஆனால் திருமணமான பிறகு நடிகைகள் தொடர்ந்து நடித்தால் மட்டும் இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என கேட்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிப்பது தவறா? இந்த வருடம் எனது 4 படங்கள் ரிலீசாகவுள்ளது. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என எனக்கு ஆத்திரமாக வருகிறது என்று ஆக்ரோஷமாக காஜல் கூறியுள்ளார்.