'ஆத்தாடி என்னா வெயிலு' இதனாலதா காஜல் அகர்வால் இப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளாரோ?

'ஆத்தாடி என்னா வெயிலு' இதனாலதா காஜல் அகர்வால் இப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளாரோ?


actress-kajal-agarwal---new-movie---telungu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வால் இன்று விஜய், அஜித், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் வெகுவாக வாய்ப்புகள் குறைந்தாலும் இயக்குனர் சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் தெலுங்கில் இளம் நடிகர் சீனிவாஸ் பெல்லம்கொண்டி உடன் இணைந்து சீதா என்ற படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அந்தப் படத்தின் ஒரு காட்சிக்காக காஜல் வெயிலுக்கு ஐஸ் டப்பில் குளிக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


   
இந்த புகைப்படத்தை பார்த்ததும் நடிகர் வடிவேலு வெற்றி கொடிகட்டு படத்தில் ஆத்தாடி, ‘என்னா வெயிலு கூலிங் கிளாஸ் போடலன்னா ரெண்டு கண்ணும் அவுஞ்சுரும் போலயே’ என்று கூறுவது தான் நினைவுக்கு வருகிறது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.