பாலிவுட் சினிமாவில் ஒழுக்கம் குறைவாக இருப்பதால் இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை.. காஜல் அகர்வாலின் சர்ச்சையான பேட்டி.?

பாலிவுட் சினிமாவில் ஒழுக்கம் குறைவாக இருப்பதால் இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை.. காஜல் அகர்வாலின் சர்ச்சையான பேட்டி.?


actress-kajal-agarval-controversy-interview-about-bolly

பிரபல முன்னி நடிகையான காஜல் அகர்வால் முதன்முதலில் இந்தியில் 'ஹோ கயா' என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் லக்ஷ்மி கல்யாணம், சந்தா மாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் வருடம் தமிழில் வெளியான பழனி திரைபடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

காஜல் அகர்வால்

இதன்பின், தமிழில் பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, மாரி, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த பல படங்கள் மிகபெரிய ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் இந்தி சினிமாவை விட்டு தமிழ், தெலுங்கு திரையுலகிற்கு வந்ததன் காரணம் என்ன என்ற கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு காஜல் சர்ச்சையை ஏற்படுத்திய பதிலை அளித்துள்ளார்.

காஜல் அகர்வால்

அவர் கூறினார்; "இந்தி என் தாய்மொழி. சிறு வயதில் இருந்தே என் தாய் மொழியில் படங்கள் பார்த்து தான் வளர்ந்தேன். தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கம், மதிப்பு, அறம் அதிகம் கடைபிடிக்கிறேன். அது இந்தி சினிமாவில் குறைவு. இதனால் தான் தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகின்றேன்.