சினிமா

எந்த நேரத்திலும் தற்கொலை செய்துகொள்வேன்! பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி!

Summary:

Actress jeya pradha talks about her sad life and suicide attempt

சினிமாவில் பிரபலங்களாக இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்க்கையில் பல சோகங்கள், இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் தான் பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பிரபல நடிகை ஷகீலா சில நாட்களுக்கு முன்பு கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகினர். இந்நிலையில், பிரபல நடிகை ஜெயப்பிரதா தானும் பலமுறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

1974ல் ‘பூமி கோசம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜெயப்ரதா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ்,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்து வந்தார்.

தமிழில் வெளியான சலங்கை ஒளி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் இன்றுவரை நினைவில் உள்ளன. ஒருசில தமிழ் படங்களுக்கு பிறகு தெலுங்கில் பிஸியாக நடிக்க ஆரம்பித்த ஜெயப்பிரதா ஒரு கட்டத்தில் அரசியல் பக்கம் சென்று எம்.பி. ஆகவும் ஆனார். இவர் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் பொது செயலாளராக இருந்த அமர் சிங்குடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜெயப்பிரதா, நான் எவ்ளவோ சொல்லியும் யாரும் நம்பவில்லை, நான் எந்த நேரத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என எனக்கே தெரியாது என தனது தாயாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் நடிகை ஜெயப்பிரதா.


Advertisement