விஜய் 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா.?

விஜய் 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா.?



Actress ivana joined with vijay movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

thalapathy

தமிழில் தொடர்ந்து பல ஹிட்  திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார் விஜய். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்திற்கு பின்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், இளைய தளபதி விஜய் கதாநாயகனாக மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

thalapathy

இது போன்ற நிலையில், தளபதி 68 படத்தில் லவ் டுடே பட நடிகை இவானாவும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி இவானாவின் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.