தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா ஐஸ்வர்யா ராய்?..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!
இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யாராய். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவருக்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணமானது.
இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார். இதனைதொடர்ந்து மீண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வந்தது.
இதற்கிடையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிய பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திலிருந்து வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக மீண்டும் தகவல் பரவியுள்ளது. ஆனால், இது குறித்து நடிகை ஐஸ்வர்யாராய் தரப்பில் விளக்கமளித்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.