புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அந்த நாள் இன்னும் நியாயம் இருக்கு.. தன் மகன் குறித்து நடிகை இலியானா போட்ட எமோஷனல் பதிவு!!
தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை இலியானா. பின்னர் அவர் தளபதி விஜய்யுடன் நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. நடிகை இலியானா தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் அவர் பாலிவுட்டில் தற்போது
அன் ஃபேர் அண்ட் லவ்லி, லவ்வர்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை இலியானா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். பின்னர் அவர் தனது காதலன் மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அண்மையில் நடிகை இலியானா தனது மகன் குறித்து போட்ட எமோஷனலான பதிவு வைரலாகி வருகிறது. "சரியாக ஒரு வருடத்திற்கு முன் என் குழந்தை எனக்குள் ஒரு சிறிய விதையாக இருந்தான். அப்பொழுது எனக்கு இருந்த ஆச்சரியம், நடுக்கம் மற்றும் பதட்டம், எனது மகனை காப்பாற்ற வேண்டும். பாதுகாப்பாக இருத்தல் வேண்டும் என்ற உணர்வுகள் இன்றும் எனது நினைவில் உள்ளது. ஆனால் இப்பொழுது அவன் எனது கைகளில் தூங்குகிறான். இந்த விஷயங்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது" என பதிவிட்டுள்ளார்.