இந்தியா சினிமா Bigg Boss

திரட்டு தொழில் ஈடுபட்ட பிக் பாஸ் பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி!!  

Summary:

Actress hina khan stolen 12 lakhs worth gold chain

பாலிவுட் நடிகை ஹினா கான், ஸ்பான்சராக கிடைத்த தங்க நகையை திருப்பி தராததால், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது நகைக்கடை நிறுவனம். நடிகை ஹினா கான் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 11 சீசன் மூலமாக பிரபலமானார். பல்வேறு இந்தி சினிமா மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ள ஹினா கான், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்ற தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதிக விலைமதிப்புள்ள தங்க நெக்க்லாஸ் ஒன்றை அணிந்து வந்துள்ளார். அந்த நெக்க்லாஸ் அந்த விழாவிற்காக ஸ்பான்சர் செய்யப்பட்டது. இந்நிலையில் விழா முடிந்து ஒருவார காலம் ஆகியும் ஹினா கான் அந்த நகையை திருப்பி தரவில்லை என்று கூற படுகிறது.

 இதை தொடரந்து, ஸ்பான்சர் தரப்பில் நடிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது . அதில், ஹினா கானின் அஜாக்கிரதை காரணமாக, எங்களுக்கு ரூ.11 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நெக்லசை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும் . அவர், திருப்பி தர மறுத்துவிட்டதோடு, தொந்தரவு செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஹினா கான் தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்னர்.

இதையடுத்தே அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தது. குறிப்பிட்ட நகையையோ அல்லது அந்த நகைக்குரிய மதிப்பு தொகையை ஹினா கான் உரிய நிறுவனத்துக்கு திருப்பி தர வேண்டும். மேலும், தேவையற்ற தொல்லை தந்ததற்காக, ஹினா கான் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்பதோடு, ரூ.2 லட்சம் கூடுதல் இழப்பீடு தொகையும்  தர வேண்டும், என கூறியுள்ளனர். 

இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் உடனடியாக, தனது ட்விட்டர் பக்கத்தில்கருது தெரிவித்துள்ளார் நடிகை  ஹினா கான், ‘’இந்த வக்கீல் நோட்டீஸ் இதுவரை எனது வீட்டுக்கு வரவில்லை. ஆனால், அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது தெரியவில்லை. இதை நினைத்தால் சிரிப்பாக உள்ளது என்று அவர் நக்கலாக பதில் கூறியுள்ளார்.


Advertisement